Friday, March 12, 2010

நேற்று இன்று நாளை

நேற்று
குழந்தை: தாத்தா! நானும் சித்தப்பா பொண்ணும் விழையாடும் போது அத்தை பையன் அடிச்சிட்டான்.
தாத்தா: கூட்டுக் குடும்பத்தில இதெல்லாம் சகஜம். போய் அடிச்சிக்காம விளையாடுங்க.

இன்று
(ஒரு கோடை விடுமுறையில்)
குழந்தை: தாத்தா என்ன சித்தப்பா பொன்னு அடிச்சிட்டா
தாத்தா: வருஷத்துக்கு ஒரு முறை வற்றீங்க. அடிச்சிக்காம விளையாடுங்க.

நாளை
குழந்தை: அம்மா தாத்தான்னா யாரும்மா?





நேற்று
அம்மா: தேங்காய் நார் எடுத்துட்டுப்போய் ஆத்துல நல்லா தேய்ச்சு குளிச்சுட்டு வா!
இன்று
அம்மா: டேங்க்ல தண்ணி இல்ல. ஒரு பக்கட் தண்ணில குளிச்சிட்டு வந்துருப்பா
நாளை
அம்மா: தண்ணி எல்லாம் இல்ல டிசு பேப்பர்ல ஒடம்ப துடைச்சிட்டு வா!





நேற்று
மனைவி: களியும் கருவாட்டு குழம்பும் வச்சிருக்கேன் வந்து சாப்பிடுங்க.
இன்று
மனைவி: பிரட்டும் ஜாமும் வச்சிருக்கேன் வந்து சாப்பிடுங்க
நாளை
மனைவி: amg75g ubgole240l 10Mg வச்சிருக்கேன்

Friday, March 5, 2010

அரியர்ஸ்

எல்லா பேப்பரும் பேப்பரல்ல அக்டோபரில்
அரியர்ஸ் பேப்பரே பேப்பர்.

தன்னைத்தான் காக்கின் அரியர்ஸ்காக்க காவாதான்ரிசல்ட்
தன்னையே கொல்லும் அரியர்ஸ்.

எப்பேப்பர் விட்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
மேஜர் பேப்பர் விட்டவர்க்கு.

அரியர்ஸால் பட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ஆசிரியர் மேலுள்ள வெருப்பு.

வைப்பின் அரியர்ஸ் அலைடில்வைக்க அஃதிலார்
வைப்பின் வைக்காமை நன்று.

அக்டோபரில் ஆகாதெனினும் மறுபடியும் அரியர்ஸை
ஏப்ரலில் எழுதுவது நலம்.

நல்லதொரு சேர்மனும் செக்ரடரியும் சேர்ந்து
ஸ்ட்ரைக் செய்வதாம் காலேஜ்.

நாள்தோரும் காலேஜ்வந்து க்ளாஸ்வாரா மாணவன்தேர்வு
அட்டணன்ஸ் இன்றி கெடும்.

அலைடில் ஆகாது எனினும் முயர்ச்சிதன்
மேஜரில் மார்க் வரும்.

லாங்வேஜ் என்பஏனை அல்லைடென்ப இவ்விரண்டும்
கண் என்ப அரியர்ஸுக்கு.

Sunday, February 28, 2010

குறைப்பிரசவம்

ஏழையின்
வீட்டுச்சுவற்றிற்க்கும்
வெள்ளை அடிக்கபடுகிறது.
தேர்தல் விளம்பரத்திற்க்காக.



ஏழைக்கும் பணக்காரணுக்கும்
என்ன வித்தியாசம்?
ஏழை
கிழிந்த உடைகளை அணிவான்.
பணக்காரன்
உடைகளை கிழித்து அணிவான்.



நாங்கள்தான் ஏழைகள்
அறை குறை
ஆடைகளுடன் திரிகிறோம்.
நீங்கள் ஏன்
நாகரீக மங்கைகளே?



அழகான பொம்மைகள்தான்
ஆனால்
ரசிக்க முடியவில்லை
வற்றிய குரலுடன்
கூவி விற்றுகொண்டிருக்கும்
சிறுவனின் கையில் இருப்பதால்.




வித விதமான
படையல்களுடன்
விருந்து.
பசியால் இறந்தவனுக்கு
திவசம்
.

பெயர்கள்

நம் ஊரில் சிதம்பரம் பழனி திருப்பதி கருப்பன் என்ற பெயர்களை கேட்டிருக்கிறோம். அதேபோல் சில பெயர்கள்.

வட இந்தியர்கள்
Japan Singh
Kashmir Singh
Kabul Singh
China Ram
Punjab Singh

வெளிநாட்டவர்கள்

Brown
Block
White
Green

யாரே சொன்னாங்க

ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பனி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாலையை அகலப்படுத்துவதற்க்காக சாலையோரத்தில் இருந்த ஒரு சிறு கோவிலை இடமாற்றம் செய்ய பெரும்பகுதியிணர் தீர்மாணித்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் எதிர்க்கவே பிரச்சனை பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்தில் பெரியவர் ஒருவர் கேட்டார்... மனிதன் காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான். அந்த காட்டில் இருந்த மிருகங்கள் எல்லாம் எங்கே சென்றது?. எவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அவரே சொன்னார் அந்த மிருகங்கள் தான் இங்கே மனிதர்களாக அலைந்து கொண்டிருக்கின்றன என்றார். உண்மையை உணர்ந்த இரு பிரிவினரும் சமாதானமாகி சாலையை அமைப்பதென முடிவெடுத்தனர்.

டிக் டிக் டிக்




உன் தோல்விக்கு யாரோ ஒருவர் தான் காரணம் என்பதை நீ சரியாக புரிந்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் அந்த யாரோ ஒருவர் நீ அல்ல என்பதைத்தான் தவறாக புரிந்துக்கொண்டிருக்கிறாய்.

எவை எல்லாம் உங்களுக்கு அளவிற்க்கு அதிகமாக சந்தோஷத்தை தருகிறதோ அவை இதற்க்கு முன் உங்களுக்கு துன்பத்தை தந்தவை அல்லது இனி உங்களுக்கு துன்பத்தை தருபவை.

வெற்றி என்பது யானையைப் போன்றது
அதற்க்கு மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலம் பொன் போன்றது
ஆனாலும் அதை அடகு வைக்க முடியாது.


நீ எதை விதைத்தாலும் களை உனக்கு பரிசாக கிடைக்கும்
அதை பெறுவதும் நிராகரிப்பதும் உன் கையில்தான் இருக்கிறது.

மென்மையான பெண்களுக்கு கடவுள் அளித்த வலிமையான ஆயுதம் அழுகை.

முன்னே செல்பவனைப் பார்த்து முயற்சி செய்
பின்னே வருபவனைப் பார்த்து திருப்தி கொள்.

நீ இழந்தவை எல்லாம் மீன்டும் உனக்கு கிடைக்கும்.
அதற்க்கு ஈடாக கிடைத்தவைகளை மீன்டும் இழப்பதற்க்கு நீ தயாராக இருந்தால்.

அறிவாளிகள் விமர்சனம் செய்கிறார்கள்
முட்டாள்கள் குற்றம் மட்டுமே காண்கிறார்கள்.

70 சதவீதத்தினர் லஞ்சம் வாங்குகிறவர்கள்
25 சதவீதத்தினர் வாய்ப்பு கிடைக்காதவர்கள்
மீதம் உள்ள 5 சதவீதத்தினர் இது போல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

Friday, February 26, 2010

டிக் டிக்


இந்த உலகம்
நீங்கள் மற்றவர்களை ஏமாற்றும்பொழுது உங்களை பார்த்து ரசிக்கிறது. நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படும்பொழுது உங்களை பார்த்து சிரிக்கிறது.


இரவில் வானத்தில் நிலா இல்லை என்பதற்க்காக அமாவாசை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். மேகமூட்டமாகவும் இருக்கலாம் காத்திருங்கள்.


உங்கள் தோட்டத்தில் உள்ள ரோஜாச்செடியில் ரோஜாக்களும் முற்களும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்தது ரோஜாவிற்க்கா முள்ளிற்க்கா என்பது நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.


சொர்கத்திற்க்கு செல்ல எனக்கு தகுதி இல்லை
நரகத்தில் இடம் காலியாக இல்லை
அதுவரை தண்டனையாக புமியில் நான்.



கவிஞர்கள் சுத்த பொய்யர்கள். அதனால்தான், பெண்களை நம்மால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.



நினைப்பு பிழைப்பை கெடுக்கும்.
நினைப்பு பிழைப்பை கொடுக்கும்.


இந்த உலகில் மிகப்பெரும் தியாகிகள் பெண்கள்
ஆனால் அதை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.


மற்றவர்கள் செய்து முடித்ததாக கூறும் செயல்களை உன்னாலும் செய்ய முடியும் என நம்பு. மற்றவர்கள் உன்னால் செய்ய முடியாதவையாக கூறும் செயல்களை உன்னால் மட்டுமே செய்ய முடியும் என நம்பு.


பாராட்டப்பட வேண்டியவர்கள் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் மட்டுமல்ல. வெற்றியை மயிறிலையில் தவறவிட்டவர்களும் போட்டியில் பங்கேற்றவர்களும் தான்.